ரஷியாவில் மாயமான இந்திய மாணவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டது!

ரஷியாவில் காணாமல் போன இந்திய மாணவர் அஜீத் சிங் சௌத்ரி பற்றி..
ரஷியாவில் காணாமல் போன மருத்துவ மாணவரின் உடல்
ரஷியாவில் காணாமல் போன மருத்துவ மாணவரின் உடல்
Published on
Updated on
1 min read

ரஷியாவில் உள்ள அணையில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது இந்திய மாணவரின் உடல் ராஜஸ்தானின் அல்வாருக்குக் கொண்டு வரப்பட்டது.

அல்வார் மாவட்டத்தின் லக்ஷ்மங்கர் தாலுகாவில் உள்ள கஃபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜீத் சிங் சௌத்ரி. இவர் ரஷியாவில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். இவர் கடந்த அக்.19ல் உஃபா நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கிப் படித்துவந்த நிலையில், திடீரென மாயமானர்.

இதனிடையே காணாமல்போய் 19 நள்களுக்குப்பிறகு ரஷியாவின் வெள்ளை நதிக்கு அருகிலுள்ள ஒரு அணையில் நவம்பர் 6 அன்று மருத்துவ மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இறந்தவரின் முதல் பிரேதப் பரிசோதனை ரஷியாவில் நடத்தப்பட்டது. அஜீத் சிங்கின் உடல் மாவட்ட மருத்துவமனையின் பிணவறைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டதை அவரது உறவினர் பன்வர் சிங் உறுதிப்படுத்தினார்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல் தகனத்திற்கான கஃபன்வாடா கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. கிராம மக்கள், குடும்ப உறுப்பினர்கள் இளம் மாணவரின் உடலைக் கண்டு கதறி அழுதனர். அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

அஜீத் சிங்கின் குடும்பத்தினர் வெளிநாட்டில் தனது மகன் மருத்துவ கல்வியை மேற்கொள்ளவேண்டி, தங்களின் விவசாய நிலத்தின் ஒரு பகுதியை விற்று ரஷியாவிற்குப் படிக்க அனுப்பினர். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

மகனின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அஜீத் சிங்கின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Summary

The body of a 22-year-old Indian student recovered from a dam in Russia arrived in Rajasthan's Alwar on Monday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com