பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததாக வெளியான விடியோ உண்மை இல்லை எனத் தகவல்.
பிடிஐ வெளியிட்ட தகவல்
பிடிஐ வெளியிட்ட தகவல்
Published on
Updated on
1 min read

பிகாரில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் பாஜக - ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த நிலையில் அங்கு பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததாக விடியோ ஒன்று வைரலானது.

ஆனால், அந்த விடியோ போலியானது என்றும், சுபீன் கார்க் இறுதிச் சடங்கில் கூடிய மக்கள் கூட்டத்தின் விடியோவை, தவறுதலாக சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் என்று சில சமூக விரோதிகள் பரப்பியதாகவும் விளக்கம் வெளியாகியிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில், ஒரு முக்கிய சாலையில், ஏராளமான மக்கள் அலைகடலென திரண்டு செல்லும் விடியோ பரப்பப்பட்டது. இது பிகாரில் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக பாஜகவுக்கு எதிராக நடந்த போராட்டம் என்று அந்த விடியோக்களில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாடகர் ஸுபின் கர்க் இறுதிச் சடங்கு காட்சிகள்
பாடகர் ஸுபின் கர்க் இறுதிச் சடங்கு காட்சிகள்(கோப்புப் படம்)

பிகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு சில நாள்களுக்குப் பிறகு இந்த விடியோ அதுவும் இன்ஸ்கிராம் கணக்குகள் பலவற்றில் இருந்தும் பகிரப்பட்டிருந்தது.

ஆனால், பிடிஐ உண்மை கண்டறியும் குழுவிர், இந்த விடியோ புதிய விடியோ அல்ல, பிகார் தேர்தலுடன் தொடர்புடைய விடியோவும் இல்லை, அசாம் மாநிலத்தில் பாடகர் சுபீன் கார்க் மரணத்தின்போது திரண்ட மக்களின் விடியோ என்றும் தெரிவித்துள்ளது.

Summary

Did protests break out against the BJP in Bihar? What is the fact check

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com