

புணேவில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள மஞ்சரி பகுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஐந்து முதல் ஆறு இளைஞர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.
அவர்களில் 2 பேர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலியாகினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அவர்கள் மூவரை ரயில் மோதியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞர் மஞ்சரியில் அருகிலுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர்.
நாங்கள் விபத்து மரணம் தொடர்பான வழக்கைப் பதிவு செய்துள்ளோம்.
மேலும் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார். 3 இளைஞர்கள் ரயில் மோதி பலியான நிகழ்வு மஞ்சரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.