

தேசிய தலைநகரில் உள்ள இரண்டு சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே, பள்ளிகள், மால்கள், அரசியல்வாதிகளின் வீடுகள் எனத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இன்று பிரசாந்த் விஹார் மற்றும் துவாரகாவில் அமைந்துள்ள பள்ளிகளுக்குக் காலை 9 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து,
தில்லி தீயணைப்பு சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். ஆனால் சந்தேகத்திற்குரிய எந்தவித பொருளும் கிடைக்கப்பெறவில்லை.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என அறிவிக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: எங்களது பலமே கூட்டணிதான்: அமைச்சர் அன்பில் மகேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.