எங்களது பலமே கூட்டணிதான்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
Published on
Updated on
1 min read

10 ஆண்டுகளாக கூட்டணியாகதான் உள்ளோம், எங்களது பலமே கூட்டணிதான் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஹாக்கி ஆண்களுக்கான உலகக் கோப்பை போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடைபெற உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு திடலில் நடைபெற்றது.

இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, “பொதுவாகவே மழைக்காலம் என்று சொன்னால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பள்ளிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது, அப்படி தேங்கினால் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும், கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும், மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அனைவருமே கூட்டணியாகதான் உள்ளனர், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கூட்டணியாகதான் உள்ளோம். எங்களது பலமே கூட்டணிதான். ஒவ்வொருவர், ஒவ்வொரு கருத்துகள் ஒவ்வொரு கொள்கைகள் கொண்டவர்களாக இருந்தாலும் பொது எதிரியாக இருக்கக்கூடிய, கொள்கை எதிரியாக இருக்கக்கூடியவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

அவர்களை எதிர்க்க வேண்டிய மிகப்பெரிய கட்டாயம் நமக்கு இருப்பதினால், ஒற்றுமையாக தோழமை உணர்வோடு, எங்களது வெற்றிக் கூட்டணி பலத்திற்கான வெற்றியாகதான் பார்ப்போம். ராகுல் காந்தி விஜய்யிடம் பேசியது குறித்து, அவரிடம்தான் கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.

Summary

Anbil Mahesh, Minister of School Education, gave an interview to reporters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com