

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.
பிகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளம், உத்தரப் பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் பணிகள், கடந்த நவ. 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த 12 மாநிலங்களிலும் இதுவரை 95 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் அவசரகதியில் நடத்தப்படுவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் எஸ்ஐஆர் நடைபெறும் மாநிலங்களில் தலைவர்கள், பொறுப்பாளர்கள், செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையும் கலந்துகொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.