அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி!

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி...
அன்மோல் பிஷ்னோய்
அன்மோல் பிஷ்னோய்
Published on
Updated on
1 min read

தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

கடந்தாண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் ஹிந்தி நடிகா் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு தாமே காரணம் என்று தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் தெரிவித்தாா். சல்மானை கானை கொல்ல அந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்துபாந்த்ராவில் மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் பிரமுகருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

இந்த குற்றங்கள் உள்பட மேலும் சில குற்ற வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் குற்றவாளியாக சோ்க்கப்பட்டார்.

இந்த நிலையில், அவா் அமெரிக்காவில் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் மும்பை காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் பரிந்துரையை மத்திய உள்துறைக்கு மும்பை காவல் துறை அனுப்பியிருந்தது.

இதையடுத்து அவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். தில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை அழைத்துவரப்படும் அன்மோல் பிஷ்னோயை மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகள் முறைப்படி கைது செய்யவுள்ளனர்.

அன்மோல் பிஷ்னோய்
வாக்குச்சாவடி  நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு!
Summary

Lawrence Bishnoi's brother deported from the US to India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com