

இலங்கையில் மோசமான வானிலை நிலவி வருவதையடுத்து இரண்டு சர்வதேச விமானங்கள் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டன.
இலங்கையில் இன்று காலை நிலவிய கடும் பனி காரணமாக சர்வதேச விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. அதன்படி, இஸ்தான்புல்லில் இருந்து புறப்பட்ட துருக்கிய ஏர்லைன்ஸ் விமானமும், சௌதி அரேபியாவின் தம்மமில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும் திருப்பிவிடப்பட்டது.
துருக்கிய ஏர்லைன்ஸ் விமானத்தில் 258 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் இருந்தனர், அதே நேரத்தில் ஸ்ரீலங்கன் ஏல்லைன்ஸ் விமானத்தில் 8 பணியாளர்கள் உள்பட 188 பயணிகள் இருந்ததாக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு விமானங்களும் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. தலைநகர் கேரளத்தில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமானதைத் தொடர்ந்து, வானிலை மேம்பட்டது. அதன்பின்னர் இரண்டு விமானங்களும் புறப்பட்டு கொழும்புக்கு தங்கள் பயணத்தைத் தொடர அனுமதித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.