

ஜார்க்கண்டில் சோதனை ஒன்றின்போது பாம்பு விஷம் கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் பாம்பு விஷம் கடத்திய கும்பலை வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் வனத்துறையின் கூட்டுக் குழு கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த கும்பலைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்ததாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சோதனையில் இந்தக் குழுவிடமிருந்து சுமார் 1,200 கிராம் பாம்பு விஷத்தையும் 2.5 கிலோ எறும்பு தின்னி செதில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். முதியவர் மற்றும் அவரது மகன் உள்பட கைதான 3 பேரும் புதன்கிழமை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டிருக்கலாம், சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மெதினிநகர் மாவட்ட வன அதிகாரி சத்யம் குமார் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட விஷத்தின் மதிப்பு சுமார் ரூ.80 கோடி, அதே நேரத்தில் எறும்பு தின்னி செதில்களின் மதிப்பு ரூ.15-20 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுவதால் அதன் விஷத்துக்கு சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.