மகாராஷ்டிர பாஜக தலைமை பற்றி அமித் ஷாவிடம் முறையீடு! கிடைத்த பதிலால் ஷிண்டே அதிர்ச்சி!!

மகாராஷ்டிர பாஜக தலைமை குறித்து அமித் ஷாவிடம் முறையீடு வைத்த ஷிண்டேவுக்கு கிடைத்த பதிலால் அதிர்ச்சியடைந்தார்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் ஃபட்னவீஸ், துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே -  கோப்புப்படம்
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் ஃபட்னவீஸ், துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே - கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளிப்படுத்த ஷிண்டே மறுத்துவிட்டார். பிகார் வெற்றி குறித்து வாழ்த்து தெரிவிக்கவே அமித் ஷாவை சந்தித்ததாகவும், மகாராஷ்டிர பாஜக தலைமை குறித்து புகார் தெரிவிக்க அல்ல என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கும் நபர் அல்ல நான், போராடுபவன்தான் நான் என்றும், பாஜக தலைமையிடம் புகார் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மறைமுகமாக ஷிண்டே பதிலளித்திருந்தார்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஷிண்டே பற்றி உத்தவ் தாக்கரே பேசுகையில், தில்லியில் அமித் ஷாவை ஷிண்டே சந்திக்கச் சென்றுள்ளார், சிறு குழந்தைகள், தன்னை யாராவது அடித்துவிட்டால், ஓடோடிச் சென்று தந்தையிடம், அப்பா அவன் என்னை அடித்துவிட்டான் என்று அழுதுகொண்டே புகார் சொல்வார்களே அதுபோலத்தான் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியும், ஷிண்டேவின் தில்லி பயணம் குறித்துப் பேசுகையில், தனது கட்சி உடைக்கப்பட்டு வருவது குறித்து கவலை தெரிவிக்கவே சென்றிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது, ஷிண்டே, சிவ சேனையை இரண்டாக உடைத்து மகாராஷ்டிர முதல்வரானார். இப்போது, அவருக்கு, அவரது சொந்த மருந்தையே பாஜக கொடுத்து ருசி பார்க்கச் சொல்கிறது. ஷிண்டே சிவசேனை என்றொரு கட்சி இருந்தது என்று மகாராஷ்டிர வரலாறில் பதிவாகும் நாள் விரைவில் வரும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் ரவீந்திர சவன் குறித்து, நேற்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷாவை சந்தித்து, புகார் அளித்த துணை முதல்வர் ஷிண்டேவுக்கு எந்த ஆறுதலோ அல்லது நிவாரணமோ கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதற்கு மாறாக, ஒவ்வொரு கட்சியும், அதன் அடிப்படை உறுப்பினர்களை அதிகரிக்கவும், கட்சியை வளர்க்கவும் முழு உரிமை உள்ளது என்றும், அவ்வாறுதான் மகாராஷ்டிரத்திலும் பாஜக அதன் வளர்ச்சியை நோக்கி செயல்பட்டு வருவதாகவும் பதிலளிக்கப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமித் ஷாவை சந்திக்க தில்லி சென்றிருந்த ஷிண்டே, 50 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாகவும், அப்போது பாஜக தலைவர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ஷிண்டே பட்டியலிட்டதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மகாராஷ்டிர பாஜக தலைமை, சிவசேனை எம்எல்ஏக்களை தங்கள் கட்சிக்குள் கொண்டு வர முயற்சிகளை தொடர்ந்து செய்வதாகவும், பாஜக தலைமையிலான மகாயுதி அரசில், சிவசேனை கட்சியினர் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஆனால், இது பற்றி தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக கட்சி விரிவுபடுத்தும் பணிகளை நிறுத்தப்போவதில்லை என்றுதான் ஷிண்டேவுக்கு பதிலாகக் கிடைத்ததாகக் கூறுகிறார்கள்.

ஷிண்டேவுக்கு வழங்கப்பட்ட அறிவுரையில், பாஜக தலைமை, சிவ சேனை எம்எல்ஏக்களை வாங்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு, தங்கள் கட்சி எம்எல்ஏக்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களை குறை சொல்வதில்லை அர்த்தமில்லை. அது மட்டுமல்ல, பாஜக ஒரு தேசிய கட்சி. அதனால் பலரும் பாஜகவில் இணைய விரும்புவார்கள். எனவே, பாஜகவும் தன்னை விரிவுபடுத்திக்கொள்ளவே முயற்சிகளை எடுக்கும். ஒரு மாநிலத்தில், ஆட்சிக்குள் நடக்கும் விவகாரங்களை, மாநிலத்துக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாக, பெயர் கூற விரும்பாத ஒருவர் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், பாஜக தலைவர், 2029ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை, பாஜக, எந்தக் கட்சியையும் நம்பி இல்லாமல், கூட்டணி அமைக்காமல், தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்பதையும் தெளிவுபடுத்தவிட்டதாகக் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளிப்படுத்த ஷிண்டே மறுத்துவிட்டார். பிகார் வெற்றி குறித்து வாழ்த்து தெரிவிக்கவே அமித் ஷாவை சந்தித்ததாகவும், மகாராஷ்டிர பாஜக தலைமை குறித்து புகார் தெரிவிக்க அல்ல என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கும் நபர் அல்ல நான், போராடுபவன்தான் நான் என்றும், பாஜக தலைமையிடம் புகார் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மறைமுகமாக ஷிண்டே பதிலளித்திருந்தார்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஷிண்டே பற்றி உத்தவ் தாக்கரே பேசுகையில், தில்லியில் அமித் ஷாவை ஷிண்டே சந்திக்கச் சென்றுள்ளார், சிறு குழந்தைகள், தன்னை யாராவது அடித்துவிட்டால், ஓடோடிச் சென்று தந்தையிடம், அப்பா அவன் என்னை அடித்துவிட்டான் என்று அழுதுகொண்டே புகார் சொல்வார்களே அதுபோலத்தான் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியும், ஷிண்டேவின் தில்லி பயணம் குறித்துப் பேசுகையில், தனது கட்சி உடைக்கப்பட்டு வருவது குறித்து கவலை தெரிவிக்கவே சென்றிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது, ஷிண்டே, சிவ சேனையை இரண்டாக உடைத்து மகாராஷ்டிர முதல்வரானார். இப்போது, அவருக்கு, அவரது சொந்த மருந்தையே பாஜக கொடுத்து ருசி பார்க்கச் சொல்கிறது. ஷிண்டே சிவசேனை என்றொரு கட்சி இருந்தது என்று மகாராஷ்டிர வரலாறில் பதிவாகும் நாள் விரைவில் வரும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

Despite flagging the internal friction within the Mahayuti during his meeting with Union Home Minister Amit Shah in Delhi, Maharashtra Deputy Chief Minister Eknath Shinde reportedly did not receive any relief.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com