மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் தம்பதி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
அஜித் பவார்
அஜித் பவார்கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் தம்பதி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றான தீயணைப்புப் படை வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது சனிக்கிழமை மோதியது.

இதில் தம்பதியினரும் அவர்களது இரண்டு மகள்களும் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காலை 11.30 மணியளவில் தரூர் வட்டத்தில் உள்ள தெல்கான்-தரூர் சாலையில் நிகழ்ந்துள்ளது. விபத்தில், விஷ்ணு சுதே, அவரது மனைவி மற்றும் ஏழு மற்றும் மூன்று வயதுடைய இரண்டு மகள்கள் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் தரூர் கிராமப்புற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கொல்கத்தாவில் தரையிறக்கம்

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அம்பேஜோகையில் உள்ள கிராமப்புற அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த விபத்தால் தெல்கான்-தரூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தில் தொடர்புடைய வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தரூர் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

Summary

A couple and their two minor daughters were injured after a fire brigade vehicle that was part of Maharashtra Deputy Chief Minister Ajit Pawar's convoy rammed into their motorcycle in Beed district on Saturday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com