ஏசி பெட்டியில் ‘டீ கெட்டிலில்’ நூடுல்ஸ் சமைத்த பெண்.! சர்ச்சை விடியோவால் மத்திய ரயில்வே காட்டம்!!

ரயிலில் ஏசி பெட்டியில் ‘டீ கெட்டில்’ வைத்து நூடுல்ஸ் சமைத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
ஏசி பெட்டியில் ‘டீ கெட்டிலில்’ நூடுல்ஸ் சமைத்த பெண்.!
ஏசி பெட்டியில் ‘டீ கெட்டிலில்’ நூடுல்ஸ் சமைத்த பெண்.!எக்ஸ் விடியோவில்...
Published on
Updated on
2 min read

ரயிலின் ஏசி பெட்டியில் பெண் ஒருவர் ‘டீ கெட்டில்’ வைத்து நூடுல்ஸ் சமைத்த விடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், இது ரயில்வே வட்டாரத்தில் கவலையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

ரயில் பயணம் என்றாலே அனைவருக்கும் அலாதியான பிரியம்தான். இந்தியா முழுவதிலும் உள்ள கடைக்கோடியிலுள்ள மாநிலங்களையும் இணைப்பதில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது.

தொலைதூர பயணங்கள், குறைவாக டிக்கெட் கட்டணம், கழிவறை வசதி, படுக்கை வசதி இருப்பதால், நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். நீண்டதூர பயண ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி சார்பில், ரயில்களின் உள்ளே பேண்ட்ரி கார்கள் அமைக்கப்பட்டு உணவுகளும் வழங்கப்படுகிறது.

அனைத்து தரப்பு மக்களும் வாங்கக் கூடிய வகையில், நியாயமான விலையில் உணவுகளை ரயில்களில் விற்பனை செய்து வருகிறது ஐஆர்சிடிசி. சுத்தம், சுகாதாரத்தைக் காரணத்தில் கொண்டு, ஒரு சிலப் பயணிகள் தங்களின் வீடுகளில் இருந்தே உணவுகளை எடுத்து வருவதும் உண்டு.

இப்படியாக பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து வரும் நிலையில், ஓடும் ரயிலில் பெண் ஒருவர், ஏசி பெட்டியில் எலெக்ட்ரிக் டீ கெட்டிலில் நூடுல்ஸ் சமைத்த விடியோ ஒன்று இணையத்தில் பரவி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விடியோவில், 50 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், பயணிகள் செல்போனுக்கு சார்ஜிங் செய்த பிரத்யேமாக வழங்கப்பட்டுக்கு சாக்கெட்டில் மின் கெட்டிலை செருகி, நூடுல்ஸ் சமைக்கிறார். மேலும், கெட்டில் மற்றும் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் தனது சகோதரி கொடுத்துவிட்டதாகவும், அதே கெட்டிலில் 15 பேருக்கு டீ தயாரித்ததாகவும் கூறுகிறார்.

இந்தச் செயலை இணையவாசிகள் பலரும் கடிந்துகொண்டு விமர்சித்த நிலையில், சிலர் இதனை சாமர்த்தியம் என்று பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ரயிலில் உள்ள பிளக் பாய்ண்டுகள் கைபேசி, லேப்டாப், மொபைல் போன்ற குறைந்த வோல்டேஜ் சாதனங்களுக்கென பிரத்யகமாக அவை 110 வாட் வரை மட்டுமே வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரிக் கெட்டில், ஹீட்டர், குக்கர் போன்ற அதிக வாட் கொண்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவது இந்திய ரயில்வே விதிமுறைகளின்படி முற்றிலும் தடை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தகைய மின் சாதனங்களைப் பயன்படுத்தினால் மின்சுற்று அதிக சூடு ஏற்பட்டு, மின்கசிவால் தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது. மேலும், ஏசி பெட்டிகளில் தீப்பற்றும் அபாயம் அதிகமாக உள்ளதாகவும், ஒருவேளை தீப்பற்றினாலும் வெளியேறுவது அதைவிடவும் கடினம் என்றும் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

15 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள அந்த விடியோவை மறுபதிவிட்டு கருத்திட்டுள்ள மத்திய ரயில்வே நிர்வாகம், “ஏசி ரயில் பெட்டிகளில் மின் கெட்டில்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பானது. இது குற்றமான செயலாகவும் கருதப்படுகிறது.

இதுபோன்ற செயல்கள் மின்னணு போர்டுகளில் மின்கசிவை ஏற்படுத்தி தீ விபத்துக்கு வழிவகுக்கும். இது மற்ற பயணிகளும் பேரழிவாக அமையும். இதுபோன்ற செயல்களை பயணிகள் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்.

இதுமாதிரியான செயலை ரயிலில் பார்த்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக புகாரளிக்கவும்” மத்திய ரயில்வே நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Summary

Viral Video Of Woman Cooking Maggi In Train Sparks Safety Concerns, Railways Takes Action

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com