

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியை அவமதிக்கும் விதமாக பாடியவர்கள் மீது வழக்கு தொடரவிருப்பதாக கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகார் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி தொடர்பாக பல போஜ்புரி பாடகர்களும் பாடல்களை வெளியிட்டனர். இந்த நிலையில், பாடல்கள் மூலம் ஆர்ஜேடி கட்சியை அவமதித்ததாக பல்வேறு பாடகர்கள் மீது வழக்குத் தொடரவுள்ள அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பிகாரில் மீண்டும் காட்டாட்சி வரும் என்றும் பாடல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில்தான், கட்சியின் பெயரையும் தலைவர்களின் பெயரையும் அங்கீகாரம் குறிப்பிட்டதாக 32 பாடகர்களுக்கு தேஜஸ்வி யாதவ் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி மற்றும் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியோ ஆதாரமோ வழங்குமாறு நோட்டீஸ் கோருகிறது. அத்தகைய ஆதாரங்களை வழங்காவிட்டால், அத்தகைய பாடகர்கள் மீது எஃப்ஐஆர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்ஜேடி தெரிவித்துள்ளது. மேலும், ஆர்ஜேடி குறித்த அவமதிப்பு பாடல்களின் பின்னணியில் பாஜக இருப்பதாகவும், பெரும்பாலான பாடகர்களுக்கு பாஜகவுடன் தொடர்பிருப்பதாகவும் ஆர்ஜேடி குற்றம் சாட்டுகிறது.
ஆர்ஜேடி குறித்த பாடல்களில் வன்முறை, அச்சுறுத்தல் வரிகள், துப்பாக்கி கலாசாரம், கடத்தல் குறித்தும், யாதவ் மேலாதிக்கம் குறித்தும் வெளியாகின.
இதனிடையே, 2022-ல் பாடகர் துன்துன் யாதவ் பாடிய பாடலும் சமீபத்தில் வைரலான நிலையில், பிகார் தேர்தல் பிரசாரத்தில் துன்துன் பாடலை பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசினார்.
இதுகுறித்து துன்துன் யாதவ் கூறுகையில், ``ஆர்ஜேடி-க்கு எதிராக நான் எந்தப் பாடலையும் பாடவில்லை. ஆனால், எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டால், அதனை விருப்பத்தோடு ஏற்றுக் கொள்வேன்; சரிசெய்து கொள்வேன். தேவைப்பட்டால், எனது பாடலை நீக்குவேன்’’ என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, ஆர்ஜேடி கட்சியை எனது கட்சி என்றே துன்துன் யாதவ் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: அயோத்தியில் ஏற்றப்பட்டது வெறும் கொடி அல்ல; நாகரிகத்தின் மறுமலர்ச்சி! மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.