

நாட்டின் முன்னணி பான் மசாலா குடும்பத்தின் மருமகள் தீப்தி (40) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பான் மசாலா நிறுவனங்களை நடத்தி வரும் கமல் கிஷோர் என்பவரின் மகள் அர்பித். இவரது மனைவி தீப்தி (40). இவர் தில்லியின் வசந்த் விஹார் பகுதியில், தன்னுடைய வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.‘
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தீப்தி தற்கொலை செய்வதற்கு முன்பு, எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், ஒரு உறவு என்பதில், அன்போ அல்லது நம்பிக்கையோ இழந்துவிட்டபிறகு, வாழ்வதில் என்னதான் பயன். இங்கிருக்கும் யாரையும் குறை சொல்ல தான் விரும்பவில்லை என்று எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம், குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், பல்வேறு கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அர்பித் - தீப்தி தம்பதிக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமான நிலையில், 14 வயதில் மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.