தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கோவாவில் ராமர் சிலை: நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை திறப்பது பற்றி..

News image

கோவாவில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலை - x.com

Updated On :27 நவம்பர் 2025, 8:40 am


இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கலச் சிலையைக் நாளை (நவம்பர் 27) கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார். 

ஒருநாள் பயணமாகக் கர்நாடகம், கோவா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்தவகையில் ஸ்ரீ சமஸ்தான கோகர்ண பர்தகலி ஜீவோத்தம்  மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கலச் சிலை, நாளை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ராமரின் சிலையை நாளை பிற்பகல் திறந்துவைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து பக்தர்கள், விருந்தினர்களுக்கான தரிசனம் சபா காரியக்ரமம் நடைபெறுகிறது. மடத்தின் 550-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 77 அடி உயர ராமர் சிலை திறக்கப்படுவதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் கூறியுள்ளார். 

பிரதமர் சிறப்பு அஞ்சல் முத்திரை மற்றும் நினைவு நாணயத்தையும் வெளியிடுவார். மேலும் இந்த நிகழ்வில் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கர்நாடகத்தின் உடுப்பில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்திற்குச் சென்று லட்ச காந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர் பங்கேற்று பகவத் கீதையை ஓதுவார்கள் என்று கூறப்படுகிறது. 

Summary

Prime Minister Narendra Modi will visit Karnataka and Goa on Friday to take part in the 550-year celebrations of the Shri Samsthan Gokarn Partagali Jeevottam Math and unveil a 77-feet bronze statute of Lord Ram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.