3 மணிநேரத்தில் உருவாகும் டிட்வா புயல்! சென்னைக்கு 730 கி.மீ. தொலைவில்...

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் பற்றி...
டிட்வா புயல்
டிட்வா புயல்Photo: www.windy.com
Updated on
1 min read

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் டிக்வா புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று (புதன்கிழமை) காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.

இது புதன்கிழமை நள்ளிரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், இன்னும் 3 மணிநேரத்தில் டிக்வா புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தற்போது (நவ. 27, வியாழக்கிழமை பகலில்) சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு - தென்கிழக்கே 640 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் புயலாக நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்தில் வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு யேமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் சூட்டப்படும்.

Summary

Cyclone Ditwah to form in the next 3 hours! 730 km from Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com