கோவாவில் உலகின் உயரமான ராமர் சிலை! பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளது குறித்து...
கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்எக்ஸ்/BJP
Updated on
1 min read

கோவாவில், 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ. 28) திறந்துவைத்துள்ளார்.

கோவாவில், ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் 550 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக, ராமரின் 77 அடி உயர வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இதையடுத்து, தெற்கு கோவாவில் உள்ள மடத்தின் கோயிலுக்கும் அவர் சென்றுள்ளார்.

இந்த நிலையில், குஜராத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை வடிவமைத்து உருவாக்கிய சிற்பி ராம் சுடார் என்பவர்தான் இந்தப் புதிய ராமர் சிலையையும் செதுக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இது உலகின் மிக உயரமான ராமர் சிலை என்று கோவாவின் பொதுப்பணித் துறை அமைச்சர் திகாம்பர் காமத் கூறியுள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் அசோக் கஜபதி ராஜு மற்றும் முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: கார் விற்பனை.. பெயர் மாற்றம் செய்யாவிட்டால் என்னவாகும்? விரிவான பார்வை!

Summary

Prime Minister Narendra Modi inaugurated a 77-foot tall statue of Lord Ram in Goa today (Nov. 28).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com