கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

டிசம்பர் 15-ல் தெலங்கானாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு

தெலங்கானாவின் கலாச்சார மையமான ரவீந்திர பாரதியில் மறைந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் சிலையை வரும் டிசம்பர் 15ஆம் தேதி மாநில அரசு திறந்து வைக்கிறது.

கோப்புப்படம்.

Published On :

தெலங்கானாவின் கலாச்சார மையமான ரவீந்திர பாரதியில் மறைந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் சிலையை வரும் டிசம்பர் 15ஆம் தேதி மாநில அரசு திறந்து வைக்கிறது.

பாலசுப்ரமணியத்தின் மைத்துனரும் மூத்த நடிகருமான ‘சுபலேக’ சுதாகர் முதல்வர் ரேவந்த் ரெட்டியை சனிக்கிழமை சந்தித்து சிலை திறப்பு விழாவிற்கு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

அப்போது சிலையை ரவீந்திர பாரதியில் நிறுவ அரசு எடுத்த முடிவுக்கு முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

முன்னதாக கடந்த நவம்பவர் 27ஆம் தேதி சுதாகருடன் இணைந்து சுற்றுலா அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ், ரவீந்திர பாரதிக்கு சென்று சிலை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவில், சிலை திறப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பல பரிந்துரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியதாக தெரிவித்தார்.

பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்.25 -ஆம் தேதி கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரது உடல் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

Summary

The Telangana government will unveil a statue of legendary singer S P Balasubrahmanyam at Ravindra Bharati, the state-run cultural centre, on December 15.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.