

நேபாளத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து போகாராவுக்கு புத்தா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சனிக்கிழமை புறப்பட்டது.
பிற்பகல் 3.45 மணிக்கு போகாரா சர்வதேச விமான நிலையத்தில் விமனாம் தரையிறங்கும்போது பறவை அதன்மீது மோதியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவத்திற்குப் பிறகு, விமானத்தில் தொழில்நுட்பக் குழு பாதுகாப்பு சோதனை மேற்கொண்டது. அதில் உந்துவிசை பிளேடு சிறிது சேதமடைந்ததாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இதனால் போகாரா சர்வதேச விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.