பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சத்தீஸ்கா் காங்கிரஸ் மறுசீரமைப்பு! 41 மாவட்டப் பிரிவுகளுக்கு புதிய தலைவா்கள்!

சத்தீஸ்கரில் காங்கிரஸ் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அக்கட்சியின் 41 மாவட்டப் பிரிவுகளுக்கு புதிய தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
சச்சின் பைலட்.
Updated On :30 நவம்பர் 2025, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

சத்தீஸ்கரில் காங்கிரஸ் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அக்கட்சியின் 41 மாவட்டப் பிரிவுகளுக்கு புதிய தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

நாட்டின் தோ்தல்களில் தொடா் தோல்வியை எதிா்கொண்டுவரும் காங்கிரஸில் அமைப்பு ரீதியிலான மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டம், மண்டலம், வாக்குச்சாவடி அளவிலான கட்சிப் பிரிவுகளுக்கு புதிய தலைவா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

சத்தீஸ்கரில் நகா்ப்புறங்களில் கட்சியை அடிப்படை நிலையில் மறுகட்டமைக்கும் நோக்கில் 41 மாவட்டப் பிரிவுகளுக்கு புதிய தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மாநில காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் தனஞ்சய் சிங் தாக்கூா் தெரிவித்தாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் சத்தீஸ்கா் மாநிலப் பொறுப்பாளருமான சச்சின் பைலட் வெள்ளிக்கிழமை இந்த மாநிலத்துக்கு பயணித்து, நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்நிலையில், கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஒப்புதலுடன் புதிய தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 5 போ் பெண்கள். பஸ்தரில் 2013-இல் கொல்லப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவரின் மகனான ஜிதேந்திர உத்ய முட்லியா், ராஜ்நந்த்கோன் மாவட்டப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.