கர்நாடகத்தில் ஓய்வுபெறும் கார் ஓட்டுநருக்கு கர்நாடகப் பல்கலைக்கழக பதிவாளர் ஓட்டுநராக மாறிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கார் ஓட்டுநராகப் பணியாற்றியவர் ருத்ரப்பா. இவர் நேற்றுடன் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்வுபெறும் நாளில் பல்ககலைக்கழக பதிவாளர் நிஜலிங்கப்பா ஓட்டுநராக மாறி ருத்ரப்பாவையும் அவரது குடும்பத்தினரையும் காரில் ஏற்றி வீடு வரை ஓட்டிச்சென்றார்.
இது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணத்தை உருவாக்கியது. ஆரம்பத்தில் தற்காலிக ஓட்டுநராக பணியில் சேர்ந்த ருத்ரப்பா பின்னர் நாளடைவில் நிரந்தர ஓட்டுநராகப் பணியாற்றினார்.
22 ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சேவைக்குப் பிறகு, அவர் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 29 ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
ஐந்து துணைவேந்தர்கள் மற்றும் ஆறு பதிவாளர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டமே. தான் பணிபுரிந்த ஒவ்வொரு அதிகாரியும் தன்னிடம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டதாக ருத்ரப்பா தெரிவித்தார்.
Summary
Rudrappa, who served as a car driver for Vice-Chancellors and Registrars of Karnataka University for nearly 23 years, was in for an emotional surprise on November 29 when he retired.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா
சைவத்திற்கு மாறிய சிலம்பரசன்!

தூா்வாரப்படாத ஆனந்தவள்ளி வாய்க்கால்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் தொடா் போராட்டம் வாபஸ்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


