

தெலங்கானாவில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்ததாக நான்கு மருத்துவ மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் சீனியர் மாணவர்கள் தங்கள் விடுதியில் ஜூனியர் மாணவர்களை சிட்-அப் செய்ய கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சுமார் 15 நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஜூனியர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். புகாரைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரியில் கல்லூரி அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
ரேகிங் தடுப்புக் குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட நான்கு மூத்த மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர்கள் 4 பேரும் இரண்டு மாதங்களுக்கு வகுப்புகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓர் ஆண்டுக்கு விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டனர் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.