

உத்தரகண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவில் 3.7 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
காலை 10:27 மணிக்கு கர்ணபிரயாக், நாராயண்பாக், தாராலி மற்றும் தேவால் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய அவர்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்த் கிஷோர் ஜோஷி கூறுகையில், நிலநடுக்கத்தின் மையம் சாமோலி அருகே இருந்தது.
சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றார். இருப்பினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் எதுவும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.