சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

டிட்வா புயல் இன்று மாலைக்குள் தமிழக - புதுவை கடற்கரையை நெருங்கும்!

டிட்வா புயல் நிலவரம் தொடர்பாக...

Published On :

டிட்வா புயல் இன்று மாலைக்குள் தமிழக - புதுவை கடற்கரையை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல், இன்று(நவ. 30) காலை 5.30 மணி நிலவரப்படி, அதே பகுதியில் நிலவுகிறது

வேதாரண்யத்துக்கு வடகிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு-வடகிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.

டிட்வா புயல், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இந்தப் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, ​​தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக-புதுச்சேரி கடற்கரையை 70 கி.மீ. முதல் 30 கி.மீ. வரையிலான தொலைவில் இன்று (நவ. 30) ​​மாலைக்குள் நெருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை: புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக திருவள்ளூர், ராணிப்பேட்டையில் அதி பலத்த மழைக்கு (210 மி.மீ.க்கும் அதிகமாக) வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில்  மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Summary

Regarding the situation regarding Cyclone Ditwah.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.