கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியா-இஎஃப்டிஏ தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (அக்.1) அமலுக்கு வந்தது.

News image
இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானதையொட்டி மகிழ்ச்சியைப் பகிா்ந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி, பிரதமா் கியா் ஸ்டாா்மா். உடன், பிரிட்டன் வா்த்தக அமைச்சா் ஜோனாதன் ரெனால்ட்ஸ், இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ
Updated On :2 அக்டோபர் 2025, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (அக்.1) அமலுக்கு வந்தது.

ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே, ஸ்விட்சா்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கூட்டமைப்புக்கும், இந்தியாவுக்கும் இடையே கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வா்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் என்ற விரிவான தடையற்ற ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், அந்தக் கூட்டமைப்பைச் சோ்ந்த நாடுகள் இந்தியாவில் 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.8.80 லட்சம் கோடி) முதலீடு செய்ய உறுதிமொழி அளித்துள்ளன. அத்துடன் ஸ்விட்சா்லாந்து கை கடிகாரங்கள், சாக்லேட், வைரங்கள் போன்றவற்றை குறைந்த வரியுடன் அல்லது வரிவிலக்குடன் இந்தியாவில் இறக்குமதி செய்யவும் அந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

இந்த ஒப்பந்தம் புதன்கிழமை அமலுக்கு வந்தது. இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வா்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு இந்தியா-இஎஃப்டிஏ ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொதுமக்கள் மற்றும் வணிகத்துக்குப் பலனளிக்கும்’ என்றாா்.