நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!

நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா பற்றி...
நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா!
நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா!Photo : X / RSS
Published on
Updated on
1 min read

நாக்பூரில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு நிறைவு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டுள்ளார்.

கடந்த 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்ட நிலையில், நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் நூற்றாண்டு நிறைவு மற்றும் விஜயதசமி விழா, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி. ஹெட்கேவார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் உடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, புது தில்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.100 சிறப்பு நாணயத்தை வெளியிட்டார்.

Summary

RSS centenary celebrations in Nagpur! Ramnath Kovind to participate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com