மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இரண்டு சக்திவாய்ந்த ஐஇடி ரக குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு
IANS
Published on
Updated on
1 min read

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இரண்டு சக்திவாய்ந்த ஐஇடி ரக குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

உளவுத் துறை தகவல்களின் பேரில், அசாமின் கச்சார் மாவட்டத்துடனான மாநில எல்லைக்கு அருகிலுள்ள மகா பஸ்தியில் அசாம் ரைபிள்ஸ் படையினர்(மத்திய துணை ராணுவப் படை) ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

திசை தெரியாமல் பயணிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம்!

இந்த தேடுதல் நடவடிக்கையின்போது "மூன்று மின் சாதனங்களுடன் 12 கிலோ எடையுள்ள இரண்டு ஐஇடி வெடிபொருட்கள் மற்றும் 12 மீட்டர் வெடிக்கும் தண்டு ஆகியவை மீட்கப்பட்டன," என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

பின்னர் வெடிகுண்டு செயலிழப்புப் படையினரால் ஐஇடி வெடிபொருட்கள் பாதுகாப்பாக அழிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Summary

Two powerful improvised explosive devices (IEDs) were found in Manipur's Jiribam district, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com