பிகாரில் 20 ஆண்டுகளாக ஆளும் கட்சி செய்யாததை ஆர்ஜேடி செய்யும்: தேஜஸ்வி யாதவ்

பிகாரில் கடந்த 20 ஆண்டுகளாக ஆளும் கட்சி செய்யாததை 20 மாதங்களில் செய்வோம் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
தேஜஸ்வினி யாதவ்
தேஜஸ்வினி யாதவ்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பிகாரில் கடந்த 20 ஆண்டுகளாக ஆளும் கட்சி செய்யாததை 20 மாதங்களில் செய்வோம் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

மத்தியில் கடந்த 17 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் பிகாரில் எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவ. 6 மற்றும் 11 என இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவான வாக்குகள் நவ. 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையொட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தேஜஸ்வி யாதவ் பதிவிட்டுள்ளதாவது,

''அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு துக்கங்கள் மற்றும் பிரச்னைகளை அகற்றும் பிரமாண்ட திருவிழா வரவுள்ளது. அந்த நாளில் ஒவ்வொரு பிகாரைச் சேர்ந்தவர்களும் தேஜஸ்வியுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடுவீர்கள். ஏனெனில், அந்த நாளில் ஒவ்வொரு பிகாரியும் முதல்வராவார்.

நவ. 11 ஆம் தேதியை மக்கள் யாரும் மறந்துவிடக் கூடாது. பிகாரின் சிறந்த எதிர்காலம், மேம்பாடு, வளர்ச்சி மற்றும் உயர்வுக்காக பொன்னெழுத்துகளாக் பொறிக்கப்பட்ட நாளாக இந்த தேதி மாறும். முழு அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு பிகாரியும் தேர்தலில் இணைய வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பிகார் தேர்தலுடன் ஜம்மு - காஷ்மீர், 6 மாநிலங்களில் இடைத்தேர்தல்!

Summary

Every Bihari will become CM Tejashwi calls Bihar polls festival of change

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com