வரும் தீபாவளிப் பண்டிகை எப்படி இருக்கும்? 2011க்குப் பிறகு முதல் முறை!

வரும் தீபாவளிப் பண்டிகை எப்படி இருக்கும்? மழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவு.
தீபாவளிப் பண்டிகை
தீபாவளிப் பண்டிகை
Published on
Updated on
2 min read

அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கிறது. இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், இப்போதே தீபாவளிக்கு துணி வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது என மக்கள் தீபாவளிக்குத் தயாராகி வருகிறார்கள்.

இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து கணித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான், தீபாவளியன்று மழை பெய்யுமா? என்பது குறித்து கணித்து வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு தீபாவளிப் பண்டிகை மழையுடன் இருக்குமா? என்று பதிவைத் தொடங்கியிருக்கிறார்.

அக்டோபர் 15 - 20ஆம் தேதிகளுக்குள் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைய அதிக வாயப்புகள் இருப்பதால், கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, தீபாவளிப் பண்டிகையன்று மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளியன்று மழை பெய்யலாம்.

தமிழக கடற்கரைப் பகுதிகளில் கடல்காற்று காரணமாக மிகச் சிறந்த சுழற்சி ஏற்பட்டுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக, அக். 17 - 21ஆம் தேதிகளில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர மாநிலப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீபாவளியன்று மழை பெய்த தரவுகளையும் வெளியிட்டுள்ளார்.

ஒரு சில ஆண்டுகள் மட்டுமே தீபாவளியன்று மழை பெய்திருக்கிறது. அதில் 2011ஆம் ஆண்டு மிக மோசமாக தீபாவளியன்று பலத்த மழை பெய்து, கொண்டாட்டத்தையே பாதித்திருந்தது. பொதுவாகப் பார்த்தால், கடந்த 20 ஆண்டுகளில் மழையில்லாத தீபாவளியே இருந்துள்ளது. ஓரிரு இடங்கள், ஓரிரு ஆண்டுகள் இதில் விதிவிலக்காக இருந்திருக்கும்.

2025, அக்டோபர் 20 - மழை பெய்யலாம்!

2024, அக்டோபர் 31 - மழை இல்லை

2023, நவம்பர் 12 - மழை இல்லை

2022, அக்டோபர் 24 - மழை இல்லை

2021, நவம்பர் 4 - மழை இல்லை

2020, நவம்பர் 14 - மழை இல்லை

2019, அக்டோபர் 27 - மழை இல்லை

2018, நவம்பர் 6 - மழை இல்லை

2017, அக்டோபர் 18 - மழை இல்லை

2016, அக்டோபர் 29 - மழை இல்லை

2015, நவம்பர் 10 - மழை இல்லை

2014, அக்டோபர் 22 - மழை இல்லை

2013, நவம்பர் 2 - மழை இல்லை

2012, நவம்பர் 13 - மழை இல்லை

2011, அக்டோபர் 26 - கனமழை பதிவானது.

2010, நவம்பர் 5 - மழை இல்லை

2009, அக்டோபர் 17 - மழை இல்லை

2008, அக்டோபர் 27 - மழை இல்லை

2007, நவம்பர் 8 - மழை இல்லை

2006, அக்டோபர் 21 - மழை இல்லை

2005, நவம்பர் 1 - மழை இல்லை

2004, நவம்பர் 11 - மழை இல்லை என்று கடந்த 20 ஆண்டு கால தரவுகளையும் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com