
புது தில்லி: இதுபோன்ற சம்பவங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது என்று வழக்குரைஞர் ஒருவர் தன் மீது காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு சிலையின் தலை ஒன்று சமூக விரோதக் கும்பலால் உடைக்கப்பட்ட நிலையில், அதனை மீண்டும் சரி செய்ய உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்குரைஞர் ஒருவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதற்கு எவ்வாறு உத்தரவிட முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பிய நிலையில், அதிருப்தி அடைந்த வழக்குரைஞர், தன்னுடைய காலணியை கழற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நீதிமன்ற காவலர்கள், உடனடியாக செயல்பட்டு, அவரிடமிருந்து காலணியைப் பறித்துக்கொண்டு, வழக்குரைஞரை நீதிமன்ற அறைக்கு வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்ற அறையில் நடந்த இந்த சலசலப்பு அனைத்தையும் கவனித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இதற்கெல்லாம் கவனத்தை சிதறவிடக் கூடாது, நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் என்னை பாதிக்காது என்று கூறிவிட்டு, வழக்கம் போல தன்னுடைய பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட முயன்ற வழக்குரைஞர் யார் என்பது குறித்தும், அவரது தாக்குதல் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
A lawyer allegedly tried to hurl a shoe towards Chief Justice of India BR Gavai during proceedings in the Supreme Court on Monday
இதையும் படிக்க.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் முயற்சி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.