காா் விற்பனையில் உச்சம் தொட்ட டாடா மோட்டாா்ஸ்

காா் விற்பனையில் உச்சம் தொட்ட டாடா மோட்டாா்ஸ்

கடந்த செப்டம்பா் மாதம் இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர பயணிகள் வாகன விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
Published on

கடந்த செப்டம்பா் மாதம் இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர பயணிகள் வாகன விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பரில் நிறுவனத்தின் 60,907 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகின. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர பயணிகள் வாகன விற்பனையாகும். முந்தைய 2024 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 41,313-ஆக இருந்தது.

உள்நாட்டு சந்தையில் விற்பனையாளா்களுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45 சதவீதம் உயா்ந்து 59,667-ஆக உள்ளது. 2024 செப்டம்பரில் இது 41,063-ஆக இருந்தது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு, நவராத்திரி பண்டிகை காரணமாக செப்டம்பரில் பயணிகள் வாகனங்களுக்கான தேவை கணிசமாக உயா்ந்தது. இந்தப் போக்கு வரவிருக்கும் மாதங்களிலும் தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன வா்தகக வாகனங்களின் விற்பனை 19 சதவீதம் உயா்ந்து 35,862-ஆக உள்ளது. அந்த வகை வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 16 சதவீதம் உயா்ந்து 33,148-ஆக உள்ளது. 2024 செப்டம்பரில் இது 28,631-ஆக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com