
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில், பாஜக நிர்வாகியான பிட்பாஷ் பாண்டா, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கஞ்சம் மாவட்டத்தின், பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும், பாஜக நிர்வாகியுமான பிட்பாஷ் பாண்டா, நேற்று (அக். 6) இரவு 10 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து, சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர், பிட்பாஷ் பாண்டாவின் உடலைக் கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, காவல் துறை உயர் அதிகாரி சரவண விவேக் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட பாஜக நிர்வாகி பிட்பாஷ் பாண்டாவின் இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெற்ற நிலையில், இந்தப் படுகொலைக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்தது முதல், சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக, பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.