பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகை! பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், 2 நாள்கள் அரசு முறைப் பயணமாக நாளை (அக். 8) மும்பை வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற பின்பு, கெய்ர் ஸ்டார்மர் முதல்முறையாக நாளை இந்தியா வருகின்றார். அப்போது, மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளின் முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மும்பை வரும் பிரதமர் மோடி, நவி மும்பையில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார். மேலும், மும்பையில் சுமார் 32,270 கோடி செலவில் கட்டப்படும் 3 ஆம் கட்ட மெட்ரோ ரயிலின் பணிகளையும் அவர் துவங்கி வைக்கின்றார்.
இத்துடன், பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் ஆகியோர், வரும் அக். 9 ஆம் தேதி, மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் நடைபெறும் குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்டில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட 75-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், வங்கி அதிகாரிகள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மனிதநேயம், நீதி படுகொலை: தலித் இளைஞர் கொலைக்கு ராகுல் கண்டனம்!
It has been announced that British Prime Minister Keir Starmer will arrive in Mumbai tomorrow (Oct. 8) on a two-day official visit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.