
ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகித்ததாக காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 11ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகித்ததாக ஆளும் காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
பாஜகவைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரா நகர காவல் நிலையத்தில் திங்களன்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வி. நவீன் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி கூறினார்.
பாஜக மக்களவை உறுப்பினர் எம். ரகுநந்தன் ராவ் திங்களன்று தெலங்கானா தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் ஜூபிலி ஹில்ஸில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் நவீன் யாதவ் வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின்படி, வாக்குச்சாவடி நிலை அதிகாரி மட்டுமே வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகிக்க அதிகாரம் உள்ளது. அதுவும் தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் என்று அவர் கூறினார்.
சட்டவிரோத வாக்காளர் அடையாள அட்டை விநியோக நிகழ்வு குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், நிகழ்வில் இருந்த காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீஸார் காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: ரஜினி - கமல் திரைப்படத்திற்குத் தயாராகும் லோகேஷ் கனகராஜ்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.