உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் ட்ரோன் திருடன் என நினைத்து தலித் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல்காந்தி பகிர்ந்த எக்ஸ் தளப் பதிவில்,
தலித் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை மனிதநேயம், அரசியலமைப்பு மற்றும் நீதியின் படுகொலை என்று விமர்சித்தார்.
அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவைப் பெறும் கும்பல்களால் நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்கள் குறிவைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ரேபரேலியில் தலித் இளைஞர் ஹரிஓம் வால்மீகியின் கொடூரமான கொலை ஒரு நபரில் கொலை மட்டுமல்ல, அது மனிதநேயம், அரசியலமைப்பு மற்றும் நீதியின் படுகொலை.
இந்தியாவில், தலித்துக்கள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் பலவீனமானவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்களின் பங்குப் பறிக்கப்படுகிறது, மலிவாகக் கருதப்படும் ஒவ்வொரு நபரும் குறிவைக்கப் படுகிறார்கள்.
நாட்டில், வெறுப்பு, வன்முறை, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. அங்கு புல்டோசர்கள் அரசியலமைப்பின் இடத்தைப் பிடித்துள்ளன, பயம் நீதியை மாற்றியுள்ளது என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும், ஹரிஓமின் குடும்பத்துடன் நான் நிற்கிறேன். அவர்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும். இந்தியாவின் எதிர்காலம் சமத்துவம், மனிதநேயத்தின் அடிப்படையில் உள்ளதே தவிர, அரசியலமைப்பின் அடிப்படையில் இயங்கும், அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களின்பேரில் அல்ல என்று அவர் பதிவில் கூறப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொகுதியான உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் 38 வயது தலித் இளைஞர் ஹரிஓம் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிஓம் வீடுகளில் திருட ட்ரோன் மூலம் குறிவைக்கும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தவறுதலாக நினைத்து கம்பு மற்றும் பெல்ட் கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டதில் தலித் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ராமதாஸ் இன்று வீடு திரும்புகிறார்: கமல்ஹாசன் தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.