
பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சை முடிந்து, இன்று(அக். 7) வீடு திரும்பவுள்ளதாக கமல்ஹாசன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதய பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.5) மாலை ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவக் குழுவினர் அவருக்கு உரிய சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
ராமதாஸ் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், முதுநிலை இதய சிகிச்சை நிபுணர் டாக்டா் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று(அக். 7), பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து, நலம் விசாரித்தார். தொடர்ந்து, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவின் உறவினரை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய கமல்ஹாசன், “மருத்துவர் அய்யாவை உடல்நலம் விசாரிக்க வந்தேன், அதற்கு முன்பாகவே நல்ல செய்தி வந்தது. ராமதாஸ் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். வைகோவுக்கு காய்ச்சல் தணிந்துவிட்டது, அவரும் நலமுடன் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள்! நள்ளிரவில் உதயநிதி ஆய்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.