
மேற்கு வங்கத்தில் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாஜக எம்.பி.யை முதல்வர் மமதா பானர்ஜி இன்று (அக். 7) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளைப் பாா்வையிடுவதற்காகச் சென்ற பாஜக எம்.பி. ககன் முா்மு, பாஜக எம்எல்ஏ சங்கா் கோஷ் ஆகியோரை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கற்களை வீசி நேற்று தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ககன் முர்முவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும், அவரை படுகாயங்களுடன் அழைத்துச் சென்றபோது காரின் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. திரிணமூல் ஆளும் மாநிலத்தில், பாஜக எம்.பி. தாக்கப்பட்டதால், ஜல்பைகுரியில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், சிலிகுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ககன் முர்முவை, முதல்வர் மமதா பானர்ஜி நேரில் சந்தித்து உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடன் இருந்து செய்யுமாறு மருத்துவர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
பின்னர், மருத்துவமனை வெளியே செய்தியாளர்களுடன் பேசிய மமதா, ''அச்சப்படும் வகையில் அவருக்கு (பாஜக எம்.பி. ககன் முர்மு) ஏதும் இல்லை. அவரின் மருத்துவ அறிக்கையைப் பார்த்தேன். சர்க்கரை நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதால், கண்காணிப்பில் வைக்கப்படுள்ளார். அவரின் காதுகளின் பின்புறம் காயம் ஏற்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
ஜல்பைகுரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடச் சென்றபோது மர்ம நபர்களால் பாஜக எம்.பி. தாக்கப்பட்டதைக் கண்டித்து தில்லி பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் மேற்கு வங்க அரசு மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்ற பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதையும் படிக்க | இருமல் மருந்தால் குழந்தைகள் பலி: சிபிஐ விசாரணை கோரி மனு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.