ஆப்கன் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி! அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா கூட்டறிக்கை!

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு ராணுவம் நிலைநிறுத்தப்படுவதற்கு மாஸ்கோ ஃபார்மட் கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு
ஆப்கன் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி!  அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா கூட்டறிக்கை!
AP
Published on
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்நிலையில், ஆப்கனில் வெளிநாட்டு ராணுவம் நிலைநிறுத்தப்படுவதற்கு இந்தியா உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் `மாஸ்கோ ஃபார்மட் கன்சல்டேஷன்ஸ் ஆன் ஆப்கானிஸ்தான்’ (Moscow Format Consultations on Afghanistan) என்ற அமைப்பின் 7ஆவது சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த சந்திப்பு மாநாட்டில் ரஷியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்ற நிலையில், முதன்முறையாக ஆப்கானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கியும் பங்கேற்றார்.

இந்த அமைப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஆப்கானிஸ்தானை ஒரு சுதந்திரமான, ஒன்றுபட்ட மற்றும் அமைதியான நாடாகக் கொண்டுவர தங்கள் ஆதரவை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தது.

மேலும், வெளிநாடுகள் தங்கள் ராணுவத்தை ஆப்கானிஸ்தானிலும் மற்ற நாடுகளிலும் நிலைநிறுத்தும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்ததுடன், அது அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு வழிவகுக்காது என்றும் கூறியது.

பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில், ஆப்கானிஸ்தானில் வெளிநாடுகள் ராணுவம் வந்தால், அது அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூட்டறிக்கை கூறியது.

இந்த சந்திப்பில் இந்திய பிரதிநிதியாக தூதர் வினய் குமார் பங்கேற்ற நிலையில், ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு ராணுவம் நிலைநிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் நீண்டகாலமாக இருந்த அமெரிக்க ராணுவம், 2021-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறியது. அமெரிக்க ராணுவம் வெளியேறிய அதே ஆண்டில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர்.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் தாங்கள் உருவாக்கிய பர்காம் விமானத் தளத்தை மீண்டும் தங்களுக்கே கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இருப்பினும், அதனை மறுத்த தலிபான்கள், ஆப்கனிலிருந்து ஓர் அங்குல நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறினர்.

இதனைத் தொடர்ந்து, விமானத் தளத்தைக் கொடுக்காவிடில் என்ன நடக்கும் என்பதை நீங்களே அறிவீர்கள் என்று டிரம்ப் எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்த நிலையில், மாஸ்கோ ஃபார்மட் கன்சல்டேஷன்ஸ் ஆன் ஆப்கானிஸ்தான் அமைப்பின் சந்திப்பு மாநாடு நடைபெற்றது.

இந்த அமைப்பானது, ஆப்கானிஸ்தானில் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சியை மேம்படுத்த 2017-ல் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த அமைப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையானது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ராணுவம் நிலைநிறுத்தப்படுவதை எதிர்த்துத்தான் மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனலாம்.

இதையும் படிக்க: கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த தலிபான்! இந்தியர் என்றதும் கிடைத்த மரியாதை! வைரல் விடியோ

Summary

Trump unites India, Russia, China: Moscow Format slams US's Bagram plan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com