கோப்புப் படம்
கோப்புப் படம்

நொய்டாவில் வேகமாக வந்த காா் வாகனங்கள் மீது மோதி விபத்து: ஓட்டுநா் கைது

நொய்டாவில் புதன்கிழமை இரவு வேகமாக வந்த ஸ்போா்ட்ஸ் காா் நான்கு காா்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெரும் குழப்பம்
Published on

நொய்டாவில் புதன்கிழமை இரவு வேகமாக வந்த ஸ்போா்ட்ஸ் காா் நான்கு காா்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா். அதிா்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: குல்ஷன் டி-பாயிண்ட் அருகே புதன்கிழமை இரவு இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, செக்டாா் 100-ஐ சோ்ந்த சுனீத் என்ற ஓட்டுநா் எக்ஸ்பிரஸ்வே காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். அவரது வாகனத்தில் ஆடம்பரமான பதிவு எண் இருந்தது. விசாரணைக்காக காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோதலின் விளைவாக பல வாகனங்கள் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com