
கேரள சட்டப்பேரவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரளத்தின் சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் உருவம் குறித்து கேலி செய்யும் வகையில் முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சபரிமலை துவார பாலகர் சிலை விவகாரம் மற்றும் முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையின் அவையிலும் வாசலிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் கூறுகையில், அமைச்சர் வி.என். வசவன் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டுமெனவும், தேவஸ்தான நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆளும் கட்சிக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவை அவையினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷின் பரிந்துரையின்படி, அவை வீதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான ரோஜி எம்.ஜான், எம். வின்சண்ட் மற்றும் சனீஷ் குமார் ஆகியோரை சபாநாயகர் ஏ.எம். ஷம்ஷீர் இன்று (அக். 9) இடைநீக்கம் செய்துள்ளார்.
இதையும் படிக்க: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஆர்ஜேடியின் தேர்தல் வாக்குறுதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.