
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அனைத்து மனுக்கள், பிரமாணப் பத்திரங்களை பார்த்த பின் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
கடந்த செப்.27ஆம் தேதி, கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில், விஜய் பிரசாரம் செய்தபோது, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.
இது தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.