
தலைநகர் தில்லியில் சாலையில் நடந்த வாக்குவாதத்தின்போது இருசக்கர வாகனத்திலிருந்த 11 கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
ஷதராவில் வசிக்கும் ராம்ரதன் அகர்வால் (22) அளித்த போலீஸ் புகாரில், தான் இருசக்கரவாகத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் தனது வாகனத்தின் மீது மோதியதாக தெரிவித்தார்.
அகர்வாலுடன் சிறிது வாக்குவாதத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறினர். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், வீட்டிற்கு வந்ததும் அகர்வால் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 11 கிலோ வெள்ளியைக் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.