
தேசிய பங்குச் சந்தை மீது நாள் ஒன்றுக்கு 17 கோடி சைபர் தாக்குதல்கள் நடப்பதாகவும், அவற்றிலிருந்து பாதுகாக்கும் பணியில், சைபர் போர் வீரர்கள் கொண்ட குழு 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
அதேவேளையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, தேசிய பங்குச் சந்தை மீது ஒரே நாளில் 40 கோடி சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், அனைத்தையும், நமது சைபர் பாதுகாப்பு வீரர்கள் கொண்ட குழு மிக நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு தகர்த்தெறிந்தனர் என்றும், இவர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும், தேசிய பங்குச் சந்தைகளைக் குறி வைத்து சைபர் மோசடியாளர்கள் தொடர்ந்து சைபர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். ஆனால், நமது தொழில்நுட்பக் குழுவானது, அதிநவீன தொழில்நுட்படங்களைக் கொண்டும், மேம்படுத்தப்பட்ட மென்பொருள் கொண்டு, 24 மணி நேரமும், சைபர் தாக்குதல்களிலிருந்து தேசிய பங்குச் சந்தையை காப்பாற்றி வருகிறார்கள் என்று தேசிய பங்குச் சந்தை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாள்தோறும், 15 முதல் 17 கோடி சைபர் தாக்குதல்கள் நடப்பதாகவும், இது நமது தொழில்நுட்பக் குழுவுக்கு மிகப்பெரிய சவாலான பணியாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேசிய பங்குச் சந்தைக்கு என இரண்டு சைபர் பாதுகாப்பு மையங்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடும். மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் தாக்குதல்களையும் ஆண்டு முழுவதும் 24/7 என்ற நிலையில் பாதுகாத்து வருகிறார்கள். இயந்திரங்கள், தொழில்நுட்பம் மற்றும் இயந்திரத்துடன் இணைந்து பணியாற்றும் நபர்கள் என பலக் குழுவைக் கொண்டது.
தேசிய பங்குச் சந்தை நடவடிக்கைகளை முடக்கி, அதில் பயனர்கள் யாரும் முதலீடுகளை செய்ய முடியாத அளவில் முடக்குவதும், அந்த விவரங்களை திருடுவது போன்றவற்றில் ஈடுபட, வைரஸ்களை அனுப்புவது, ஜிபிஎஸ் கருவியை ஏமாற்றுவது, இணையதளத்தை முடக்குவதற்கான வேலைகளில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
இந்த தேசியப் பங்குச் சந்தைக்கு மட்டுமல்ல, இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் இந்த பிரச்னை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.