
ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி சுனிதா தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தெலங்கானாவில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், மகந்தி சுனிதா ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி. ராமராவ் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் ஷைக்பேட்டையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வரவிருக்கும் ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலுக்கு லங்காலா தீபக் ரெட்டியை பாஜக தனது வேட்பாளராக அறிவித்தது. தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் வி. நவீன் யாதவை வேட்பாளராக அறிவித்தது,
கடந்த ஜூனில் பிஆர்ஆஸ் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் ஜூபிலி ஹில்ஸ் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இடைத்தேர்தலில் மகந்தி கோபிநாத்தின் மனைவி மகந்தி சுனிதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் அக். 17 தொடங்கிய நிலையில் அக்.21 வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை அக். 22 ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 24. நவம்பர் 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
இதையும் படிக்க: கரூர் பலி! அரசு மீது மக்கள் சந்தேகம் - இபிஎஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.