
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 57 வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஐக்கிய ஐனதா தளம் இன்று (அக். 15) வெளியிட்டதாக கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 பிகார் பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்டமாக ஐக்கிய ஜனதா தளம் 57 பேர் அடங்கிய வேட்பாளர்களின் பட்டியலை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் நிதீஷ் குமார் வெளியிட்டார்.
மஹானர் தொகுதியில் ஜேடியு மாநிலத் தலைவர் உமேஷ் குஷ்வாஹா, பிகார் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார், போரே (எஸ்சி)-க்கு சுனில் குமார் உள்ளிட்டோரை கட்சி அங்கீகரித்தது.
முன்னதாக, பாஜக பீகார் தேர்தலுக்கான 71 வேட்பாளர்களின் முதல் பட்டியலை செவ்வாயன்று வெளியிட்டது.
ஜேடியு அறிவித்த 51 தொகுதிகளில் லோக்ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் கேட்டிருந்த 4 இடங்களும் அடங்கும்.
பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வரும் அக்டோபர் 6 மற்றும் 11 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும்.
பிகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இதையும் படிக்க: சக்தித் திருமகன் ஓடிடி தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.