
தீபாவளியையொட்டி தில்லியில் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களில் காற்று மாசு அதிகமிருப்பதால் அங்கு தீபாவளி பண்டிகை நாள்களில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது அல்லது சில குறிப்பிட்ட நேரம் மட்டும் பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு தீபாவளியையொட்டி தில்லியில் பசுமைப் பட்டாசுகள் வெடிக்க மட்டும் அனுமதி அளித்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 18 முதல் 21 வரை காலை 6 மணி 7 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளைப் பயன்படுத்துதல், வரையறுக்கப்பட்ட நேரம் மற்றும் சுற்றுச்சூழல் நடைமுறைகள் உள்ளிட்ட கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.