
குஜராத்தில் நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ள நிலையில், அம்மாநில அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.
குஜராத்தில் பாஜக தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ள நிலையில், அதன் முன்னேற்பாடாக முதல்வர் பூபேந்திர படேலை தவிர்த்து, 16 அமைச்சர்கள் அடங்கிய ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜிநாமா செய்துள்ளனர்.
மேலும், நாளை நடைபெறவுள்ள புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் புதியவர்கள் அமைச்சராகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, புதிய அமைச்சரவையில் இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோரும் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவையின் பெயர்ப் பட்டியலை அம்மாநில ஆளுநரிடம் முதல்வர் பூபேந்திர படேல் இன்றிரவு அளிக்கவுள்ளார்.
நாளை காலை 11.30 மணியளவில் காந்திநகரில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, குஜராத் ஆளுநர் ஆச்சாரிய தேவவரத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இதையும் படிக்க: ஆந்திரத்தின் உணவைப் போல முதலீடுகளும் காரம்தான்! நாரா லோகேஷ் கிண்டல்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.