
ஆந்திரப் பிரதேசத்தில் கூகுள் நிறுவனத்தின் செய்யறிவு மையத்தை அமைக்கப்படவுள்ள நிலையில், அதனைக் கண்டு அண்டை மாநிலங்கள் சிலர் எரிச்சலடைவதாக ஆந்திர மாநில அமைச்சரும் முதல்வரின் மகனுமான நாரா லோகேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்த எக்ஸ் பதிவில் நாரா லோகேஷ் தெரிவித்ததாவது, ``ஆந்திர மாநிலத்தின் உணவு காரமானது என்பர். எங்களின் முதலீடுகளும் அப்படியே. சில அண்டை மாநிலங்கள் ஏற்கெனவே எரிச்சல் அடைந்துள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய அளவிலான செய்யறிவு தரவு மையத்தை கூகுள் நிறுவனம் திறக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.
இந்த நிலையில்தான், அண்டை மாநிலத்தில் சிலர் எரிச்சலடைவதாக நாரா லோகேஷ் கிண்டலடித்துள்ளார்.
இதையும் படிக்க: “ஏஐ-னு சொல்றாரு பா.. மேனேஜர்” இணையத்தை கலக்கும் தீபாவளி பரிசு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.