
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 44 வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை ஐக்கிய ஐனதா தளம் இன்று (அக். 16) வெளியிட்டதாக கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20025 பிகார் பேரவைத் தேர்தலுக்கான 57 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை புதன்கிழமை மாலை அறிவித்த நிலையில், இன்று 44 பேர் அடங்கிய வேட்பாளர்களின் பட்டியலை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் நிதீஷ் குமார் வெளியிட்டார்.
ஷீலா மண்டலத்தில் விஜேந்திர பிரசாத் யாதவ், லேஷி சிங், ஜெயந்த் ராஜ் மற்றும் முகமது ஜமா கான் போன்ற அமைச்சர்களும், நபி நகரில் சேத்தன் ஆனந்த், நவாத்தில் இருந்து விபா தேவி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சியான ஜேடியு, வரவிருக்கும் தேர்தலுக்கான 101 வேட்பாளர்களின் பட்டியலையும் தற்போது வெளியிட்டுள்ளது.
பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வரும் அக்டோபர் 6 மற்றும் 11 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும்.
இதையும் படிக்க: ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.