தில்லி வந்தடைந்தார் இலங்கை பிரதமர்!

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா வந்திருப்பது பற்றி...
தில்லி வந்தடைந்தார் இலங்கை பிரதமர்!
Published on
Updated on
1 min read

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, அரசுமுறை பயணமாக தில்லிக்கு வியாழக்கிழமை காலை வந்தடைந்தார்.

இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியா வந்துள்ள ஹரிணி அமரசூரியவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

அக்டோபர் 18 வரை இந்தியாவில் இருக்கும் ஹரிணி அமரசூரிய, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்து, இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இலங்கையின் கல்வித் துறை அமைச்சரகாவும் பதவி வகிக்கும் பிரதமர் அமரசூரிய, தில்லியில் உள்ள ஐஐடி மற்றும் என்ஐடிஐ ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்துடன், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் அமரசூரிய, அவர் படித்த தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு நேரில் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Sri Lankan Prime Minister arrives in Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com